Kadaikutty Singam review | கடைக்குட்டி சிங்கம் சினிமா விமர்சனம்

0
121
     
If you like this, Share this with your Friend....... If you have any suggestions, Please Comment it... the comment will be included and will be published with your Name... 
   

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் ’கடைக்குட்டி சிங்கம்’. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் எடுக்கப்பட்டுள்ள இப்படம், விவசாயத்தையும், குடும்ப உறவுகளின் பெருமைகளையும் பேசுகிறது.

நாயகன் காா்த்தி கிராமத்துக் கதைக்கு ஏற்ற முகமாக இருப்பவர். அதனால் தான் பருத்தி வீரனுக்கும், கொம்பனுக்கும் கார்த்தி தேவைப்பட்டார். காமெடி, ஆக்ஷன், காதல், திரில்லர் என எல்லா கதைக்களங்களிலும் ஒரு ரவுண்ட் வந்துள்ளார். இருப்பினும் நம் பக்கத்து வீட்டு பையனாக நடிக்கும் நேர்த்திக்காக, நிச்சயம் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைப் பார்க்கலாம்.

கிராமத்து கூட்டுக் குடும்ப கதை மட்டுமல்லாமல் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்ட ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் டாப்.

கூட்டுக் குடும்பம், விவசாயம், பழிவாங்கள், அன்பு என செட்டிமெண்டாக செல்லும் படம் மனதை உருக்கும் விதமாக இயக்குனர் பாண்டியராஜன் அமைத்துள்ளார்.


இப்படத்தில் கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானி சங்கர், விஜி சந்திரசேகர், அர்தனா பினு, பொன்வண்ணன், சூரி, சவுந்திரராஜா, மௌனிகா, யுவராணி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. ஒரு கதையில் ஏராளமான நட்சத்திரங்கள் இருந்தால், அனைவருக்கும் முக்கியத்துவம் அளிப்பது அரிது. ஆனால் அனைவரையும் சிறப்பாக கையாண்டு, இயக்குநர் பாண்டிராஜ் முக்கியத்துவம் அளித்துள்ளார். இதனால் படத்தின் முழு நேரமும் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கதை தொடக்கம் :
இந்த கதையில் வரும் கிராமத்தில் இரண்டு பெரிய தலைகள் இருக்கின்றனர் ஒருவர் சத்யராஜ், மற்றொருவர் சவுந்திரராஜா.
படத்தில் கார்த்தியின் தந்தையாக சத்யராஜ் மற்றும் அவரது சகோதரிகளாக ஐந்து பேர் என பெரிய கூட்டுக் குடும்பமாக இருக்கிறது.

கிராமத்தில் திருவிழா நேரத்தில் ரேக்ளா ரேஸ் நடத்தப்படுகிறது. இதில் கார்த்தியும், சவுந்திரராஜா கலந்து கொள்கின்றனர். இதில் கார்த்தி வெற்றி பெறுகிறார்.

பழிவாங்கல் :
இதையடுத்து கார்த்தியை பழிவாங்க துடிக்கும் சவுந்திரராஜா அவரின் குடும்பத்தை பழிவாங்கும் விதமாக அவர்களின் முக்கியத் தொழிலாக செய்துவரும் விவசாயத்தை அழிப்பது என்று சவுந்திரராஜா முடிவு செய்கிறார்.

யார் வென்றார் :
இந்த பழிவாங்கள் பிரச்னையில் யார் வெல்கிறார். யார் தோற்கிறார் என்பது தான் படம். படத்தில் ஹீரோ கார்த்தி என்பதால் அவர் தரப்பு வெற்றி பெறுகிறது.


ஸ்டண்ட் சூப்பர் :
கிராமத்து கெட்டப்பில் முறுக்கு மீசை, வேட்டி சட்டையுடன் வலம் வரும் கார்த்தி சண்டை காட்சிகளில் அட்டகாசம் செய்துள்ளார்.

விவசாயம், சண்டை காட்சி, பாசம், அன்பு என படம் பரபரப்பாக செல்வதுடன், சூரி, கார்த்தி காமெடி சிரிப்பு மழையை தருகிறது.

இசை பலம் :
கிரமப்புற படம் என்றாலே டி.இமான் இசை என்ற அளவுக்கு மாறிவிட்டது. அவரின் தீம் இசை, பாடல் என அட்டகாசம் செய்துள்ளார் இமான்.

மொத்தத்தில் இந்த கடைக்குட்டி சிங்கம் காமெடி, குடும்ப கதையாக, குடும்பத்துடன் சென்று பார்க்கக் கூடிய கதையாக அமைந்துள்ளது.

Video Review:

 

Page Source: https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/kadaikutty-singam-movie-review-and-rating-in-tamil/moviereview/64969875.cms

Trialer: of the Movie:

     
If you like this, Share this with your Friend....... If you have any suggestions, Please Comment it... the comment will be included and will be published with your Name... 
   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here