இங்கிலாந்தை ஓட விட்ட இந்தியா (Highlight included)

0
124
     

இங்கிலாந்து உடனான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, இங்கிலாந்து எதிராக பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராட்போர்ட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

BCCI

@BCCI

Captain @imVkohli wins the toss and elects to bowl first against England.

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியைப் பொறுத்தவரை, அயர்லாந்து உடனான போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட தோனி, புவனேஷ்குமார், தவான் உள்ளிட்டோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

BCCI

@BCCI

Take a look at the pitch for the first T20I against England. Thoughts? pic.twitter.com/ZhkIX6xrEH

BCCI

@BCCI

Here’s the Playing XI for the first T20I against England. pic.twitter.com/JE3fyJPonT

View image on Twitter

சென்ற போட்டியில், சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ரெய்னாவும், கேஎல் ராகுலும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்:
இங்கிலாந்து (Playing XI): Jason Roy, Jos Buttler(w), Alex Hales, Joe Root, Eoin Morgan(c), Jonny Bairstow, Moeen Ali, David Willey, Adil Rashid, Chris Jordan, Liam Plunkett

இந்தியா (Playing XI): Rohit Sharma, Shikhar Dhawan, Virat Kohli(c), Suresh Raina, Lokesh Rahul, MS Dhoni(w), Hardik Pandya, Bhuvneshwar Kumar, Kuldeep Yadav, Umesh Yadav, Yuzvendra Chahal

குல்தீப் குதுாகலம்: இந்திய அணி அபார வெற்றி

மான்செஸ்டர்: முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ராகுல் சதம் அடிக்க, பவுலிங்கில் குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.

சபாஷ் குல்தீப்

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (30), பட்லர் ஜோடி துவக்கம் கொடுத்தது. பட்லர், சர்வதேச ‘டுவென்டி–20’ யில் 7வது அரைசதம் அடித்தார். ஹேல்ஸ் (8) ஏமாற்றினார். குல்தீப்பின் 3வது ஓவரின் முதல் பந்தில் இயான் மார்கன் (7) சிக்கினார். 3, 4வது பந்தில் பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ‘டக்’ அவுட்டாகினர். 5வது பந்தை மொயீன் அலி (6) தடுத்து விளையாட ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது.

மீண்டும் வந்த குல்தீப் யாதவ், பட்லரை (69) வீழ்த்தினார். உமேஷிடம், ஜோர்டன் (0) சரிந்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5, உமேஷ் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

ராகுல் அபாரம்

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் (5) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பின் வந்த லோகேஷ் ராகுல் சிக்சர் மழை பொழிந்தார். பிளங்கட் வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 20 ரன்கள் எடுக்க, வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது இந்தியா. இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா (32) அவுட்டானார். பின் சற்று நிதானம் காட்டிய ராகுல், 53வது பந்தில் சதம் எட்டினார். சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் ரோகித்துக்குப் பின் 2 சதம் அடித்த வீரர் ஆனார் ராகுல்.

கடைசியில் கோஹ்லி ஒரு சிக்சர் அடிக்க, 18.2 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் (101), கோஹ்லி (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

1

நேற்று பட்லரை அவுட்டாக்கிய இந்தியாவின் குல்தீப் யாதவ், சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் ‘ரிஸ்ட்’ (மணிக்கட்டை சுழற்றி வீசுவது) சுழற்பந்து வீச்சாளர் ஆனார்.

33

சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக ‘ஸ்டம்டு’ செய்த விக்கெட் கீப்பர்களில் முதலிடம் பிடித்தார் இந்தியாவின் தோனி. நேற்று பேர்ஸ்டோவை அவுட்டாக்கிய இவர், 91 போட்டியில் 33 ‘ஸ்டம்டு’ செய்தார். அடுத்த இரு இடத்தில் கம்ரான் அக்மல் (32, பாக்.,), முகமது ஷாஜத் (28, பாக்.,) உள்ளனர்.
2000

நேற்று 20 ரன்கள் எடுத்த கோஹ்லி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், 2000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர், நான்காவது சர்வதேச வீரர் ஆனார். இவர், 60 போட்டிகளில் 2012 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்தின் கப்டில் (2271), பிரண்டன் மெக்கலம் (2140), பாகிஸ்தான் சோயப் மாலிக் (2039) முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.

India vs England ICC T20 03.07.2018 part 4
9 views
2 hours ago


13:45

India vs England ICC T20 03.07.2018 part3

91 views
3 hours ago

13:06
India vs England ICC T20 03.07.2018 part 2

128 views
3 hours ago

12:24
India vs England ICC T20 03.07.2018 part 1
4 views
3 hours ago


2:19

 

     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here