Chennai Nearest tourist Place

0
19
Hermann / Pixabay
     
If you like this, Share this with your Friend....... If you have any suggestions, Please Comment it... the comment will be included and will be published with your Name... 
   

சென்னையில் இருந்து 200 கிமீ அருகாமையில் இருக்கும் சுற்றுலா தளங்கள்:


1. கோவளம் கடற்கரை (34 km – 50min)
2. ஸ்ரீபெரும்புதூர்  (40 km – 50min)
3. மஹாபலிபுரம்  (52 km – 1Hr, 5 min)
4. பழவேற்காடு  (55 km – 1Hr, 10 min)
5. காஞ்சிபுரம்  (72 km – 1Hr, 25 min)
6. வேடந்தாங்கல்  (79 km – 1Hr, 40 min)
7. திருத்தணி  (85 km – 2Hrs, 5 min)
8. வேலூர்  (140 km – 2Hrs, 20 min)
9. கடலூர்  (183 km – 3Hrs, 10 min)
10. திருவண்ணாமலை  (188 km – 3Hrs, 10 min)

1. கோவளம் கடற்கரை – மூழ்கடிக்கப்பட்ட வரலாறு  (34 km – 50min)

தமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார இறுதியை குடும்பத்துடன் சந்தோஷமாக கழிப்பதற்காக ஏராளமான சென்னை வாசிகள் கோவளத்திற்கு வருகின்றனர்.கோவளத்தில் உள்ள டச்சு கோட்டையானது சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டு வருடந்தோறும் நிறைய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது ‘தாஜ் பிஷர்மேன் கோவ்’ என்று அழைக்க்படுகிறது. இளைப்பாறுவதற்க்கும் நல்ல முறையில் நேரத்ததை செலவு செய்வதற்க்கும் ஏற்ற இடம் இது.கோவளத்தில் 5ம் நூற்றாண்டு முதல் 8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவ பேரசரர்களால் கட்டப்பட்ட கோயில்களை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. இந்த கோவில்கள் முன்னாள் தென் இந்திய பேரரசுகளின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன.இந்த கடற்கரை கோவில்கள் இந்த பிராந்தியத்தில் கோவளத்தின் சுற்றுலாவிற்கு மதிப்பு கூட்டி வருகின்றன. பல்வேறு நீர் விளையாட்டுகளை கோவளத்தில் தெரிவு செய்ய முடியும். இந்தியாவில் பாய்மர படகு போட்டிக்கான ஒரே இடம் கோவளம் என்பது குறிப்பிடத்தக்கது.வங்காள விரிகுடாவிற்கு இணையாக செல்லும் ஒரு கால்வாய் கோவளத்தை நிலப்பகுதியில் இருந்து பிரிக்கின்றது. இந்த பிராந்தியத்தின் மற்ற முக்கிய இடங்கள் கோவளம் கடற்கரை, கத்தோலிக்க தேவாலயம், டச்சு கோட்டை, முத்துக்காடு காயல் நீர் முதலியன.தமிழக கடற்கரை பகுதியில் காணப்படும் அதே வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த கால நிலையானது இங்கும் காணப்படுகின்றது. கோடைகாலத்தில் இங்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது ஏனென்றால் அப்போது வெப்ப நிலையானது 38 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இங்கு சுற்றி பார்க்க சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம். இது கோவளத்தின் குளிர்காலமாகும். சென்னை, பாண்டிச்சேரி மற்றும் தரங்கம்பாடி அருகில் அமைந்துள்ள கோவளம், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் சாலை வழியாக எளிதில் அடையும் வகையில் உள்ளது.

2. ஸ்ரீபெரும்புதூர் – ஸ்ரீ இராமானுசர் பிறந்த சரித்திர பூமி! (40 km – 50min)

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் தொழில் நகரமாகிய ஸ்ரீபெரும்புதூர் சுற்றுலா தலமாக வேகமாக உருமாறி வருகிறது. ஸ்ரீபெரும்புதூரின் பழைய பெயர் பூதபுரி. ஸ்ரீபெரும்புதூரில் மரணம் அடைந்தவர்களுக்காக சொர்க்க வாசல் திறந்து இருப்பதாக நம்பப்பட்டது. சமீப காலத்தில் பல சர்வதேச நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் தங்கள் அலுவலகங்களை அமைத்து இருக்கிறார்கள்.

1999 ஆம் ஆண்டு இந்திய கார் செயல்பாடுகளை முதன் முதலில் ஹுண்டாய் நிருவனம் இங்கு தொடங்கியது. அதன் பின்னர் செயிண்ட்-கொபெய்ன், நோக்கியா, பிஎம்டபில்யு.மிட்சுபிஷி, ஹிந்துஸ்தான் மோட்டார்கள் மற்றும் நிசான் ஆகிய நிறுவனங்கள் இங்கு வருகை தரலாயின. பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் ஸ்ரீபெரும்புதூர் அமைந்து இருக்கிறது.இதன் விளைவாக இந்த நகரம் விரைவாக தொழில்நகரமாக மாறி, வளர்ச்சி அடைந்து இருக்கிறது. 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட பிறகு இந்நகரம் 2008 ஆம் ஆண்டு சிறப்பு பொருளாதார வட்டத்திற்குள் வந்தது. இதன் காரணமாக பல தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளை இது ஈர்த்துள்ளது.ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதை சுற்றி இருக்கும் சுற்றுலா தலங்கள்21 மே 1991 ஆம் ஆண்டு முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட இடம் என்பதால் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவுமண்டபத்தை தமிழக அரசு கட்டியெழுப்பி இருக்கிறது. பல்வேறு சுற்றுலா பயணிகள் இங்கே வந்து மரியாதை செலுத்துகிறார்கள்.ஆண்டு தோறும் இருங்கட்டுக்கோட்டையில் ‘மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்’ நடத்தும் பந்தயங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மற்றும் ஒரு அம்சம் ஆகும். தென்னிந்திய ரேலி மற்றும் அனைத்து இந்திய மோட்டார் பந்தய சந்திப்பு ஆகியவற்றையும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பு செய்கின்றது.ஃபார்முலா 3 பந்தயங்களை நடத்தவும் அவர்கள் அனுமதி பெற்று, உலக தரத்தில் பந்தயங்களை நடத்தி வருவது சீசன் காலத்தில் அநேக சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் வல்லக்கோட்டை முருகன் கோவில், 25 கி.மீ. தொலைவில் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தாம்பரம் விளையாட்டு பூங்கா, மெட்ராஸ் அணு மின் நிலையம் மற்றும் பிரம்மகுமாரி அருங்காட்சியகம் ஆகியவையும் முக்கியமான சுற்றுலா ஈர்ப்பு இடங்கள் ஆகும்.ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த பிறகு, செங்கல்பட்டு பட்டணத்திற்கு செல்வதும் பயனுள்ளதாக அமையும். நேர்மறையான பாலினம் மற்றும் கல்வி விகிதங்களோடு இந்த பட்டணம் அழகாக காட்சி அளிக்கின்றது.

3. மஹாபலிபுரம் – கடற்கரையோரம் ஓர் புராதன சிற்பக்கலை நகரம்  (52 km – 1Hr, 5 min)

மஹாபலிபுரம் என்ற பெயருடன் தற்போது அறியப்படும் ‘மாமல்லபுரம்’ நகரம் சென்னையை ஒட்டி தெற்கே காஞ்சிபுரம் மாவட்டத்தின் அங்கமாக வீற்றிருக்கிறது. இந்நகரம் 7 ம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தின் துறைமுக நகரமாகவும் சிற்பக்கலை கேந்திரமாகவும் மஹோன்னத கீர்த்தியுடன் திகழ்ந்திருக்கிறது. இன்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான சிற்பக்கலை சார்ந்த வரலாற்று சுற்றுலாத்தலமாக உலகளாவிய அளவில் புகழ் பெற்றிருக்கும் இந்த நகரம் சர்வதேச ‘யுனெஸ்கோ’ அமைப்பின் மூலம் உலகப்பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

பெயர்க்காரணம்மஹாபலி என்னும் அசுரகுல அரசன் இப்பகுதியை புராண காலத்தில் ஆண்டு வந்ததாகவும் பின்னர் மஹாவிஷ்ணு அவனை வதம் செய்ததாகவும் ஐதீகக்கதைகள் கூறுகின்றன.எனவே இவ்வூருக்கு மஹாபலிபுரம் என்ற ஆதிப்பெயர் இருந்து வந்தததாக நம்பப்படுகிறது. மஹேந்திரவர்ம பல்லவரின் மகனாகிய முதலாம் நரசிம்மருக்கு மாமல்லர் என்ற பெயர் உண்டு.ஒரு துறைமுக நகராக விளங்கிய இந்த நகரை கலைநகராக மாற்றிய அவரது பெயரே பின்னாளில் மாமல்லபுரம் என்று இதற்கு வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது. ‘மல்லை’ என்ற பெயரிலும் தற்போது இது சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது.வரலாற்றுப்பின்னணிதிராவிட பூமியில் சேர, சோழ, பாண்டியர்களுக்கு அடுத்தபடியாக பல்லவ ராஜவம்ச மன்னர்கள் 3ம் நூற்றாண்டிலிருந்தே பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் தமிழ் நாட்டின் வடகோடியை ஆண்டு வந்துள்ளனர்.இந்த வம்சத்தின் வழித்தோன்றல்களாக வந்த பிற்காலப்பல்லவர்கள் காலத்தில்தான் இந்த மாமல்லபுரம் ஒரு முக்கிய நகரமாக உருமாறி கோலோச்சியிருக்கிறது.மஹேந்திரவர்ம பல்லவர் மற்றும் நரசிம்மவர்ம பல்லவர் ஆகிய இரு மன்னர்கள் இன்றும் நாம் மாமல்லபுரத்தில் காணும் சிற்பக்கலை பொக்கிஷங்களின் பின்னணியோடு நெருங்கிய தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் காலத்தில் கலை, இலக்கியம், கவிதை, நாடகம் போன்ற கலைகள் யாவும் போற்றி வளர்க்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.நிஜக்கதையா, வரலாறா, கற்பனையா என்றெல்லாம் பிரித்தறிய முடியாத வண்ணம் தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் எனும் அற்புதமான புதினத்தின் ‘கதைக்களத்தில்’ மாமல்லபுரம் இடம் பெற்றிருப்பதை வாசித்தவர் அறிவர்.அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்வுகள் வெறும் கற்பனையாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை இந்த நகரில் மிச்சமிருக்கும் சிற்பச்சான்றுகள் உரைக்கின்றன. மற்ற எல்லா தமிழ் நகரங்களையும் போன்றே தொகுக்கப்படாத வரலாறும், எழுதப்படாத கீர்த்தியும்தான் மாமல்லபுரத்திற்கும் என்றாலும், இங்கு வரலாறு கல்லில் வடிக்கப்பட்ட கம்பீர கலைச்சின்னங்களில் பிரம்மாண்டமாக வாழ்கிறது.இதுதான் மாமல்லபுரத்தின் பெருமை. எனவே, கலாரசிகர்களுக்கு நவீன இரைச்சல்களை விலக்கி உளிகளின் ஓசையையும், பல்லவ மன்னர்களின் நோக்கையும் கற்பனை செய்வதில் நிச்சயம் சிரமம் இருக்க முடியாது.சூழலை முயன்று விலக்கி சிற்பக்கலை நேர்த்தியை தரிசிக்க வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயமன்றி வேறில்லை. எனினும் காலத்தை ஊடறுத்து நம் முன் மௌனக்கதை பேசும் மாமல்லபுரம் சிற்பப்படைப்புகள் நம்மை பெருமையுடன் கண் கலங்க சக்தி கொண்டவை -அதாவது வரலாற்றுக்கண் கொண்டு நோக்கும்போது.ஒரு மஹோன்னத பாரம்பரிய ஸ்தலமாக இந்த நகரை போற்றி பாதுகாத்து அதை அவ்வண்ணமே பார்வையாளர்களும் அணுக தார்மீக நெறியூக்கம் செய்ய இயலாத மாயச்சூழலில், வரலாற்று சின்னங்களும் அவை வீற்றிருக்கும் ஏதோ ஒரு வகையில் பொலிவிழந்து காட்சியளிப்பது ஒரு இமாலய சோகம்.யாவும் விட்டுச்சென்றனர் நம் முன்னோர், எனில் அவற்றை எவ்வகையில் நாம் காக்கின்றோம் என்பதே பெரும்பான்மை தமிழ் உள்ளங்களில் ஊமைக்கேள்வியாய் வீற்றிருக்கிறது.18ம் நூற்றாண்டு வரையில் மஹாபலிபுரத்தின் வரலாற்று கலைச்சின்னங்கள் வெளியுலகிற்கு தெரிந்திருக்கவேயில்லை. ஏனெனில் இந்த படைப்புகளை ரகசியமாக உருவாக்குவதென்பதும் முதலாம் நரசிம்மர் மற்றும் ராஜசிம்மர் ஆகியோரது நோக்கமாக இருந்திருக்கிறது.வரலாற்றுச்சின்னங்கள், கோயில்கள் மற்றும் சிற்பப்படைப்புகள்கலை ரசிகர்கள் மற்றும் வரலாற்றுப்பிரியர்களை பிரமிக்க வைக்கும் ஏராளமான அம்சங்கள் மாமல்லபுரத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள சின்னங்களை மண்டபங்கள், கோயில்கள், ரதக்கோயில்கள் என்று பல வகையாக பிரிக்கலாம்.பஞ்ச பாண்டவ ரதங்கள், வராக மண்டபம் மற்றும் கடற்கரை கோயில் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மேலும், மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல் கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.கடற்கரையை ஒட்டியே மாமல்லபுரம் கலை நகரம் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டிருப்பது இதன் மற்றொரு விசேஷ அம்சமாகும். வெளிநாட்டுப்பயணிகள் பலர் இந்த கடற்கரையில் காலை முதல் மாலை வரை ஓய்வெடுப்பதையும், நகர் முழுதும் சுற்றித்திரிவதையும் பயணிகள் பார்க்க முடியும். நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஒரு துர்க்கையம்மன் கோயிலும் அமைந்துள்ளது.இங்கு பல அழகிய சிலைகளை பார்க்கலாம். புலிக்குகை மற்றும் முதலைப்பண்ணை போன்றவை பயணிகள் விரும்பக்கூடிய இதர சிற்றுலாத்தலங்களாக அமைந்துள்ளன.மாமல்லபுரத்திற்கு எப்படி செல்லலாம்?சென்னைக்கு மிக அருகாமையிலும் பாண்டிச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பாதையிலும் அமைந்துள்ளதால் மிக சுலபமாக இந்த வரலாற்று நகருக்கு விஜயம் செய்யலாம். செங்கல்பட்டு வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது டாக்சி மூலமாகவும் இங்கு வரலாம்.

4. பழவேற்காடு – ஏரிகளும் இங்கே வரலாறு பேசும் (55 km – 1Hr, 10 min)

தமிழ் நாட்டின் சோழ மண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவரும் சிறு கடலோர நகரம் தான் புலிகாட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு. 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் அமைவிடமாக இருந்த பழவேற்காடு என்ற இந்த சிறு நகரம் அதிர்வுகள் மற்றும் மாறுபாடுகள் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது.

டச்சுக்காரர்களால் பெருமளவில் ஆளப்பட்ட இந்த நகரத்தின் வரலாறு அவர்களோடு மட்டும் நின்று விடவில்லை; போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களும் கூட பல்வேறு காலகட்டங்களில் தங்களுடைய வலிமையான எல்லைகளை இந்நகரத்தை சுற்றி அமைத்துக் கொண்டு இதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பங்களித்தருக்கின்றனர்.கடல் துறைமுகமாகவும், வர்த்தக மையமாகவும் இருக்கும் இந்த இடம், முந்தைய நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டின் வியாபாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளது என்றால் அது மிகையாகாது.சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பழவேற்காடு இரு விஷயங்களுக்காக மிகவும் அறியப்படுகிறது. அவை பழவேற்காடு ஏரி மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் ஆகியவையாகும்.பழவேற்காட்டிலுள்ள இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர்நிலை ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது.இந்த நீர்நிலையின் தண்ணீர் நன்னீரை விட அதிகமான உப்புத் தன்மையுடன் இருந்தாலும், இது கடல் நீர் கிடையாது. இந்த புவியியலமைப்பில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயம் பறவைகள் சீசனில் பல்வேறு இடம் பெயரும் பறவைகளுக்கு அடைக்கலம் தந்து வருகிறது.இந்த ஏரிக்கு வரும் பல்வேறு வகையான பறவைகளின் காரணமாக, பறவைகளை கவனிப்பது இங்கு வருபவர்களின் விருப்பமான பொழுதுபோக்காக உள்ளது.பழவேற்காட்டில் டச்சு சர்ச், டச்சு கல்லறை, கலங்கரை விலக்கம், சிந்தாமணீஸ்வரர் கோவில் மற்றும் பெரிய பள்ளிவாசல் ஆகிய எண்ணற்ற கண்கவரும் சுற்றுலாத்தலங்கள் உள்ளன.இங்கிருக்கும் கட்டிடங்கள் மற்றும் வடிவமைப்புகளான தேவாலயங்கள், பழமையான கட்டிடங்கள் மற்றும் கல்லறைகள் டச்சுக் கலையின் தாக்கத்திற்குட்பட்டு, டச்சு நாட்டுப் பாணியிலேயே இருப்பதை இன்றும் காணலாம்.சென்னை நகரத்திலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பழவேற்காட்டை சாலை வழியாக எளிதில் அடைய முடியும். மிதவெப்ப மண்டல பருவநிலையை எதிர் கொண்டுள்ள பழவேற்காட்டிற்கு வருடம் முழுவதும் செல்ல முடியுமென்றாலும், சுட்டெறிக்கும் கோடைகாலங்களிலும் மற்றும் அதீதமான மழைப்பொழிவு காலநிலைகளிலும் வராமலிருப்பது நன்று.இயற்கையான அழகு, மனம் மயக்கும் பறவையினங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் வளமையான கலாச்சார வரலாறு ஆகியவற்றால் சுற்றுலாப் பயணிகளுக்கும் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் விருப்பமான இடமாக பழவேற்காடு விளங்குகிறது.

5. காஞ்சிபுரம் – காஞ்சி காமாட்சியின் நகரம் (72 km – 1Hr, 25 min)

தன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அது புராதனமான காஞ்சிபுரம் நகரம் மட்டுமேயாகும். இந்நகரம், பல கோயில்களை கொண்டுள்ளதனால் மட்டுமல்ல, இது பல்லவ மன்னர்களின் தலைநகரமாகவும் இருந்த காரணத்தினாலும், பெரும் புகழ் பெற்றுள்ளது. இன்றும், சில சமயங்களில் இதன் பழைய பெயர்களான “காஞ்சியம்பதி” என்றும் “கொஞ்சிவரம்” என்றும் அழைக்கப்படுகிறது.வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்நகரை “ஆயிரம் கோயில்களின் நகரம்” என்றே அறிந்து வைத்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரத்திற்கு செல்வது எளிது.

இந்து மதத்தினர், தம் வாழ்நாளில் ஒரு தரமாவது சென்று வர வேண்டிய ஏழு புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்றான இந்நகரம், இந்துக்களின் புனித நகரமாகக் கருதப்படுகிறது.இந்து மதப் புராணங்களின் படி, அவ்வேழு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவோர் கண்டிப்பாக மோட்சத்தை அடைவர் என்று நம்பப்படுகிறது. இந்நகரம், சிவ பக்தர்கள் மற்றும் விஷ்ணு பக்தர்கள் ஆகிய இருபிரிவினருக்கும் புனித ஸ்தலமாகும்.காஞ்சிபுரம் நகரில், சிவ பெருமான் மற்றும் மஹா விஷ்ணுவிற்காக எழுப்பப்பட்ட பல கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுள் மஹா விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள வரதராஜ பெருமாள் கோயிலும், சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள ஏகாம்பரநாதர் கோயிலும் மிகப் பிரபலமானவை.சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள, ஐம்பூதங்களைக் குறிக்கும் விதமான “பஞ்சபூத ஸ்தலங்கள்” என்னும் ஐந்து கோயில்களுள், ஏகாம்பரநாதர் கோயிலும் ஒன்று.புனித நகரம்ஏராளமான விஷ்ணு கோயில்கள் இங்குள்ளதாலேயே காஞ்சிபுரம், அப்பெயரில் அழைக்கப்படுவதாக சான்றோர்கள் கூறுகின்றனர். “கா” என்பது “ஆஞ்சி”-யைக் கொண்டுள்ள பிரம்மாவை குறிக்கிறது.அதாவது இங்குள்ள விஷ்ணுவை வழிபட்ட பிரம்மா என்ற அர்த்தம் கொண்டு இதன் பெயர் வழங்கப்படுகிறது. எனினும் இங்கு சிவன் கோயில்கள் பலவும் உள்ளன. காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் அதிக பட்ச சிவன் கோயில்கள் இருப்பதால், அப்பகுதி “சிவகாஞ்சி” என்றும் விஷ்ணு கோயில்கள் அதிகம் உள்ள கிழக்குப் பகுதி, “விஷ்ணு காஞ்சி” என்றும் வழங்கப்படுகின்றது.கைலாசநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், கச்சப்பேஷ்வரர் கோயில் மற்றும் குமரகோட்டம் ஆகியன இங்குள்ள பிரபலமான வேறு சில கோயில்களாகும்.பழங்காலப்பெருமையின் கலவைவரலாற்று ஆர்வலர்கள், பெருமை மிக்க கடந்தகாலத்தைக் கொண்ட காஞ்சிபுரத்தை, மிகவும் விரும்புவர். பல்லவ மன்னர்கள், மூன்றாவது நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், காஞ்சிபுரத்தை தங்கள் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.பல்லவர்கள் பெரும் முயற்சி செய்து, நிறைய பணம் செலவழித்து இந்நகரை, தங்கள் தலைநகராக இருக்கக்கூடிய தகுதி வாய்ந்ததாக மாற்றியமைத்தனர். நல்ல சாலைகள், கட்டிடங்கள், ஆகியவற்றை நகரின் உள்ளேயும், அதனைச் சுற்றியும் நிர்மாணித்தனர்.பல்லவர்கள், சீனர்களோடு வர்த்தகம் செய்து வந்தனர். ஏழாம் நூற்றாண்டில், இங்கு வருகை தந்த சீனப் பயணியான யுவான் சுவாங், தன் பயணக் குறிப்பில், வீரம், கல்வி, மற்றும் அன்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களாகவும், சமூக நீதி போற்றுபவர்களாகவும், காஞ்சிபுரம் மக்கள் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.பதினோராம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றி, பதினாலாம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்தனர். சோழர்கள் காஞ்சிபுரத்தை தங்கள் தலைநகரமாகக் கொள்ளவில்லை; எனினும், இது முக்கியமான ஒரு நகரமாகவே அப்போதும் திகழ்ந்தது.சொல்லப்போனால், சோழ மன்னர்கள் பலவித கட்டுமானப் பணிகளை இந்நகரில் மேற்கொண்டதோடல்லாமல், அதன் கிழக்குப் பகுதியை விரிவுபடுத்தவும் செய்தனர். பதினாலாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை, விஜயநகர சாம்ராஜ்யம், காஞ்சிபுரத்தின் மீது அரசியல் செல்வாக்கு கொண்டிருந்தது.பதினேழாம் நூற்றாண்டின் முடிவில், மராத்தியர்கள் இந்நகரை கைப்பற்றினர். ஆனால் சில காலத்திலேயே, முகலாய மன்னனான ஔரங்கசீப்பிடம் இழந்தனர். பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் இந்திய வருகை அதிகரித்த வேளையில், இந்நகரம் ஆங்கிலேய அரசின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, ஆங்கிலேய ஜெனரல் ராபர்ட் கிளைவினால் ஆளப்பட்டது.இதன் சிறப்பு வாய்ந்த கடந்த கால வரலாறு, இன்றைய நவீனயுக பயணிகளும் அறியும் வண்ணம் உள்ளது. நகரம் முழுக்கக் காணப்படும் பல்வேறு சிற்பங்கள் மற்றும் கட்டிடங்களில் வெவ்வேறு கலாச்சாரங்களின் ஆதிக்கத்தைக் காணலாம்.இன்றைய நிலையில், காஞ்சிபுரம் அதன் ஏராளமான கோயில்கள் மற்றும் இந்திய, மேற்கத்திய ஆதிக்கங்களின் பூரண கலவையாக விளங்குவதால், பெரிதும் புகழ்பெற்று விளங்குகின்றது.பட்டு நகரம்காஞ்சிபுரம் பட்டு சேலைகள் உலகமெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பட்டு நூலில், தங்கச் சரிகை சேர்த்து நெய்யப்படும் இச்சேலைகள், முற்காலத்தில் வாழ்ந்த பெண்கள் மட்டுமல்லாது, இக்காலத்து நவீன பெண்களும் விரும்பும் வண்ணம் நெய்யப்படுகின்றன.இச்சேலைகள், தென்னிந்தியாவின் உடைக் கலாச்சாரத்தில் முக்கியமான அங்கமாக இருப்பினும், தமிழர்களின் தனிப்பெருமை வாய்ந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பெருமை பொருந்தியதாகும்.வருடந்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இப்புனித நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், தேவராஜஸ்வாமி கோயில், மற்றும் கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்களுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.காஞ்சிபுரம், நாட்டின் பிற பகுதிகளுக்கு, சாலை வழி மற்றும் இரயில் வழி போக்குவரத்து சேவைகளினால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும். காஞ்சிபுரத்தின் வானிலை, வெப்பமான கோடைகாலமும், இரம்மியமான குளிர்காலமுமாக மாறி மாறி காணப்படும்.

6. வேடந்தாங்கல் – உலகமே பறவைகள்! பறவைகளே உலகம்! (79 km – 1Hr, 40 min)

தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அருகாமையில் ஒரு சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஒரு சிறப்புவாய்ந்த பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது.

வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் (அதிகாரப்பூர்வமாக ஏரிகள் பறவைகள் சரணாலயம்) நாட்டில் உள்ள மிகவும் பழமையான சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.அது எவ்வாறு சிறந்த நிலையில் உள்ளது என்பதை 250 ஆண்டுகளுக்கு முன்  இருந்து உள்ளூர் மக்களால் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிற ஒன்று என்பதன் மூலம் அறியலாம்.சரணாலயம் அமைந்துள்ள பகுதி சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் 74 ஏக்கருக்கும் அதிகமான அளவில் பரவியுள்ளது. வேடந்தாங்கல் ஒரு அற்புதமான சாலை இணைப்பை பெற்றிருக்கிறது.சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் வேடந்தாங்கலை அடைய முடியும். சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி நில உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் அரசர்களால் வேட்டையாடும் பகுதியாக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பதாக வரலாறு சொல்லுகிறது.இந்த இடத்தின் பெயர் வரலாற்று உண்மையை உறுதிப்படுத்துகிறது. தமிழ் வார்த்தையான வேடந்தாங்கல், “வேட்டையாடும் களம்” என்ற பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.வேடந்தாங்கல் பகுதியில் இடம்பெயர்ந்து வரும் பல்வேறு வகையான  பறவைகளை ஈர்க்க சிறிய ஏரிகள் கொண்ட கட்டமைப்பாக அமைந்துள்ளது. வேடந்தாங்கல் பகுதியில் பறவை இனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது ஒரு பறவை சரணாலயமாக மாற்றப்பட்டது.வேடந்தாங்கல் பகுதியை  பறவைகள் சரணாலயம் என அறிவித்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அரசாணை வெளியிடப்பட்டது, அன்று முதல் இக்கிராமம்  ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறியது.பல்வேறு வகையான பறவை இனங்களுக்கு புகலிடமாக உள்ள வேடந்தாங்கல், புலம் பெயர்ந்து வரும் பறவை இனங்களான பின்டைல், நீல வண்ண இறகு பறவை, கார்கனெய், சாம்பல் வாலாட்டி, மற்றும் பொதுவான சாண்ட்பைப்பர் போன்ற பறவை இனங்களுக்கு இனவிருத்தி கால புகலிடமாக அமைந்துள்ளது.வேடந்தாங்கலில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கரிகில்லி பறவைகள் சரணாலயம். சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் இரண்டு பறவைகள் சரணாலயத்தையும் சுற்றி பார்க்குமாறு திட்டமிட்டுகொள்ளலாம்.

7. திருத்தணி – அழகன் முருகனின் ஆனந்தச் சிரிப்பு  (85 km – 2Hrs, 5 min)

தமிழ் கடவுளான முருக பெருமானின் அறுபடை வீடுகளில் திருத்தணியும் ஒன்று. இந்துக் கடவுளான முருகன் வாசம் செய்யும் இந்த திருத்தணி தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.திருத்தணியின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இங்கு அமைந்திருக்கும் திரு சுப்பிரமணியசுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேலும் சுற்றலா வருவோருக்கு விருந்தாக இங்கு பாயும் நந்தி ஆறும் இருக்கிறது.குமர தீர்த்தா அதாவது சரவண பொய்கை என்று அழைக்கப்படும் புனித தீர்த்த குளமும் திருத்தணியில் அமைந்துள்ளது. இந்த சரவண பொய்கை ஏராளமான சக்திகளை தன்னுள் கொண்டிருக்கிறது என்று முருக பக்தர்கள் நம்புகின்றனர். முருகப் பெருமான் தீய எதிரிகளுக்கு எதிராக போரிட்டு வென்ற ஆறு இடங்களில் ஒரு இடமாக திருத்தணி நம்பப்படுகிறது.முருகனின் மற்ற ஐந்து புனித தலங்களாக பழனியில் அமைந்திருக்கும் தண்டாயுதபாணி ஆலயம், திருச்செந்தூரில் அமைந்திருக்கும் செந்தில் ஆண்டவர் ஆலயம், திருப்பரங்குன்றத்தில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஆலயம், சுவாமி மலையில் அமைந்திருக்கும் சுவாமிநாத சுவாமி ஆலயம் மற்றும் பழமுதிர் சோலையில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் போன்றவை உள்ளன.இந்த ஆறு புண்ணிய தலங்களுக்கும் சென்று வேண்டி வந்தால் இறைவன் சுப்பிரமணிய சுவாமியின் அபரிவிதமான அருளைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது.திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தைத் தவிர்த்து சந்தன வேணுகோபாலபுரம் ஆலயமும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது. இந்த ஆலயத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

8. வேலூர் – வீரம் செறிந்த மண் (140 km – 2Hrs, 20 min)

பல்வேறு முக்கிய சுற்றுலா மையங்களை இணைக்கும் கேந்திரமாக வேலூர் நகரம் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டின் கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றிருக்கும் வேலூர் நகரம் திராவிட நாகரிகத்தின் உன்னதமான வரலாற்றுப்பெருமை மற்றும் செழிப்பான பாரம்பரியம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.

வேலூர் நகரை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்வேலூர் நகரம் பல முக்கியமான சுற்றுலா அம்சங்களை பயணிகளுக்காக அளிக்கிறது. இங்குள்ள வேலூர் கோட்டையானது கிரானைட் கற்களால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சின்னமாக மட்டுமல்லாமல் நகரின் அடையாளமாகவும் வீற்றிருக்கிறது.இது தவிர மணிக்கூண்டு, அரசு அருங்காட்சியகம், ஃப்ரெஞ்சு பங்களா மற்றும் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள முத்து மண்டபம் எனும் நினைவுச்சின்னம் போன்றவை வேலூரில் பார்க்க வேண்டிய இடங்களாக அமைந்துள்ளன.வேலூர் அருங்காட்சியகமானது கற்கால வரலாறு, மானுடவிய, தாவரவியல், கலை, தொல்லியல் மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்களை காட்சிக்கு வைப்பதற்கெனவே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.மேலும் வேலூர் நகரை சுற்றியும் பல கோயில்களும் சிறு சன்னதிகளும் நிரம்பியுள்ளன. இவற்றில் ஜலகண்டேஷ்வரர் கோயில் எனும் முக்கியமான ஆலயம் வேலூர் கோட்டை வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளது.ரத்னகிரி கோயில், ஆனை குளத்தம்மன் கோயில், ரோமன் கத்தோலிக் டயோசீஸ், மதராஸா மொஹமதியா மஸ்ஜித் போன்றவையும் வேலுர் நகரத்தில் உள்ள இதர முக்கியமான ஆன்மீகத்தலங்களாகும்.திருமலைக்கோடி எனும் இடத்துக்கு அருகில் ஷீபுரத்தில் அமைந்துள்ள தங்கக்கோயில் மற்றொரு விசேஷ அம்சமாகும். இது 1500 கிலோ தங்கத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த தங்கக்கோயிலில் வீற்றுள்ள மஹாலட்சுமி தேவியின் விக்கிரகம் ஆன்மீக யாத்ரீகர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். வில்லபாக்கம், வள்ளிமலை, பாலாமதி, விரிச்சிபுரம், மேட்டுகுளம், மொர்தானா அணை மற்றும் பூமாலை வணிக வளாகம் போன்றவையும் வேலூரின் இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அமைந்துள்ளன.அசம்ஷன் கதீட்ரல் மற்றும் 150 வருடங்கள் பழமையான செயிண்ட் ஜான் சர்ச் போன்றவை வேலூர் நகரத்தின் முக்கியமான கிறித்துவ தேவாலயங்களாக அறியப்படுகின்றன.இந்தியாவிலேயே பிரசித்தமான ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் ஒன்றும் வேலூர் நகரத்தில் இயங்குகிறது. சிஎம்சி என்று பிரசித்தமாக அழைக்கப்படும் வேலூர் மருத்துவக்கல்லூரி அல்லது கிறிஸ்டியன் மெடிகல் காலேஜ் வேலூரின் மற்றொரு அடையாளமாக திகழ்கிறது.மேலும், வேலூருக்கு அருகிலுள்ள ஜவ்வாது மலைப்பகுதியில் அமிர்தி ஆற்றங்கரையில் அமிர்தி விலங்கியல் பூங்கா எனும் மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலமும் அமைந்துள்ளது.காவலூர் வானோக்கு மையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய வானியல் தொலைநோக்கியை கொண்டுள்ளது. பூமத்தியரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்த மையத்தில் பல முக்கியமான வானியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.வீரம் நிரம்பிய வரலாற்றுக்கதைகள்இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வேலூரின் பெயர் முன்னணியில் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயருக்கு எதிரான முதல் சுதந்திரப்போராட வடிவமாக கருதப்படும் சிப்பாய் கலகம் வேலூர் கோட்டை வளாகத்தில்தான் முதல் பொறியாய் எழுந்தது என்பது வரலாற்று உண்மையாகும்.வேலூர் பகுதியிலிருந்து ஏராளமான ஆண்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு தகவலாகும். இதற்கான ஒரு சான்றாக வேலூர் நகரத்தின் லாங் பஜார் வீதியில் 1920ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு மணிக்கூண்டில் பின்வரும் வாசகங்களை கொண்ட கல்வெட்டுக்குறிப்பு காணப்படுகிறது. “வேலூர் – இந்த கிராமத்திலிருந்து 277 வீரர்கள் 1914-18 ம் ஆண்டு வரலாற்று போர்களில் கலந்துகொண்டனர். இவர்களில் 14 பேர் வீர மரணம் எய்தினர்”.வியாபாரம் மற்றும் பொருளாதார செழிப்புஇந்தியாவிலேயே தோல் பொருட்கள் ஏற்றுமதியில் வேலூர் நகரம் முன்னணியில் உள்ளது. முக்கிய அரசு நிறுவனமான பி.ஹெச்.ஈ.எல் எனப்படும் ‘பாரத் கனரக மின்பொருள் உற்பத்தி நிறுவனம்’ வேலூருக்கு அருகிலுள்ள ராணிப்பேட்டையில் இயங்குகிறது.ஆசியாவிலேயே மிகப்பெரிய வெடிமருந்து தயாரிப்பு நிறுவனமான தமிழ்நாடு வெடிமருந்து நிறுவனம் வேலூருக்கு அருகில் காட்பாடியில் செயல்படுகிறது. இவை மட்டுமல்லாமல் வேலூரை சுற்றியுள்ள பகுதியில் ஊரகத்தொழில்களாக பீடி தயாரிப்பு, தறி மற்றும் தீக்குச்சி தயாரிப்பு போன்றவை அதிக அளவில் நடத்தப்படுகின்றன.வேலூருக்கு எப்படி செல்லலாம்தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில நகரங்களிலிருந்தும் மிக சுலபமாக வேலூருக்கு வரலாம். சென்னை மற்றும் பெங்களூர் விமான நிலையங்கள் அருகிலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. திருப்பதி உள்நாட்டு விமான நிலையமும் வேலூர் நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.பருவநிலைவறட்சி நிரம்பிய வெப்ப மண்டல பருவநிலையை வேலூர் பகுதி பெற்றுள்ளது. இங்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகமான மழைப்பொழிவு காணப்படும். பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் வேலூருக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.

9. கடலூர் – கோயில்களை தரிசிப்போம்! கடலில் விளையாடி திளைப்போம்! (183 km – 3Hrs, 10 min)

கடலூர் நகரம் வங்காள விரிகுடாவின் கரைகளில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் ஆகும். தமிழ் மொழியில் ‘கடலின் நகரம்’ என்று பொருள் தரும் கடலூரில் சுற்றிப் பார்க்கத் தகுந்த பல்வேறு அழகிய கடற்கரைகள் அமைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஆலயங்களுக்காகவும் பெயர்பெற்ற இடம் கடலூர் நகரம் . இது பழைய கடலூர் (ஓல்டு டவுன்) மற்றும் புதிய கடலூர் (நியூ டவுன்) என்று இரண்டு வகை நிர்வாகப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

திருப்பாதிரிப்புலியூர் என்ற புதிய கடலூர் நகரத்தை கெடிலாம் நதி பாய்ந்து தனியாக பிரிக்கிறது. முகலாயர்களின் ஆட்சிக் காலத்தின் போது இஸ்லாமாபாத் என்றழைக்கப்பட்ட இந்த நகரத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கையும் கணிசமாக காணப்படுகின்றன. மேலும் கடலூர் நகரம் 1748 முதல் 1752-ஆம் ஆண்டுகள் வரை ஆங்கிலேயர்களின் சொத்துக்களை வைக்கும் தலைநகரமாக விளங்கி வந்தது.
கடலூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள்கடலூர் நகரம் சைவ மற்றும் வைணவ கோவில்களுக்காக புகழ் பெற்று விளங்கும் தலமாகும். இங்குள்ள சில முக்கிய கோவில்களாக பாதாளீஸ்வரர் கோவில், திருவாகீந்திரபுரம் கோவில், மங்களபுரீஸ்வரர் கோவில், சுடர்கொழுந்தீஸ்வரர் கோவில் ஆகியவை அறியப்படுகின்றன.  இங்கிருக்கும் பல்வேறு கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்கும் இடங்களாக இருக்கின்றன. தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய கடற்கரையான சில்வர் பீச் கடலூருக்கு மிக அருகில் உள்ளது, செயிண்ட் டேவிட் கோட்டை மற்றும் கார்டன் ஹவுஸ் ஆகிய இடங்கள் அவற்றினுடைய கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவங்களுக்காக பார்க்க வேண்டிய இடங்களாகும்.சதுப்பு நில பகுதிகளுக்காகவும், நீர் விளையாட்டுகளுக்காகவும் புகழ் பெற்று விளங்கும் பிச்சாவரம் கடலூரில் தான் உள்ளது. இது மாங்குரோவ் காடுகளின் தொடர்ச்சியாக இருக்குமிடமாகும்.கடலூருக்கு அருகிலிருக்கும் சில தீவுகள் பறவைப் பிரியர்களை ஈர்ப்பதில் பெரிதும் பங்கு வகிக்கின்றன. இங்கிருக்கும் படகு வசதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதி அளிப்பதாகவும், புதியதோர் அனுபவத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் உள்ளது.கடலூரில் உள்ள பிற சுற்றுலாத் தலங்களாக நிலக்கரி சுரங்கங்கள், கெடிலாம் கேஸில், கேப்பர் மலைகள், சிதம்பரம் மற்றும் ஸ்ரீ முஷ்ணம் ஆகிய இடங்கள் இருக்கின்றன.26 டிசம்பர் 2004-ல் ஏற்பட்ட சுனாமி அலைகளில் கடுமையான தாக்குதலுக்குள்ளான பின்னரும் கடலூர் சாகாவரம் பெற்ற நகரமாக மீண்டும் உயிர்த்தெழுந்து வளர்ந்து வந்திருக்கிறது.வரலாற்றின் பாதையில் கடலூர்வரலாற்றில் கடலூர் மாவட்டம் ‘சோழநாடு’ மற்றும் ‘நடுநாடு’ ஆகிய பகுதிகளை கொண்டிருந்தது. அந்த காலங்களிலிருந்தே இது துறைமுக நகரமாக இருந்து வந்தது. இந்த நகரம் டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கியலேயர்களால் வரலாற்றில் ஆளப்பட்டு வந்திருக்கிறது.1758 ஆம் ஆண்டு பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் கடற்படைகளுக்கிடையில் ஒரு பெரும் போர் ஒன்று கடலூரில் நிகழ்ந்தது. அமெரிக்க சுதந்திரப் போர் மற்றும் இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போர் ஆகியவை நடந்து கொண்டிருந்த போது அதன் தாக்கம் கடலூரின் அமைதியையும் பாதித்தது.இறுதியாக ஒரு அமைதி உடன்படிக்கையின் படி கடலூர் ஆங்கிலேயர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடலூரின் சில பகுதிகள் இன்றும் இந்த காலனிய ஆட்சியின் சுவடுகளை தாங்கி நின்று கொண்டிருக்கின்றன. ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட சில கல்வி நிறுவனங்கள் இன்றும் கடலூரில் செயல்பட்டு வருகின்றன.கடலூரை அடையும் வழிகள்இந்நகரம் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தின் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி விமான நிலையம் கடலூருக்கு மிக அருகில் இருக்கிறது, சென்னை விமான நிலையம் மிக அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையமாகவும் இருக்கிறது.கடலூரில் உள்ள இரண்டு ரயில் நிலையங்கள் இந்நகரை பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றன. தேசிய நெடுங்சாலை 45A-ல் அமைந்துள்ள கடலூர் சாலைவழியே மிகச்சிறந்த இணைப்பை பெற்றுள்ள நகரமாகும்.கடலூரின் பருவநிலைமித வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள கடலூரில் பருவநிலையும் மிதமானதாக இருக்கும். குளிர்காலம் நிலவும் அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் கடலூருக்கு வருவது நல்ல அனுபவத்தை கொடுக்கும். இந்த நேரத்தில் வெப்பநிலை மிகவும் ரம்மியமானதாக இருப்பதால் பயணிகள் நல்ல சூழலை எதிர் கொள்ள முடியும்.

10. திருவண்ணாமலை – நாகரீக கற்பனையுலகம்! (188 km – 3Hrs, 10 min)

திருவண்ணாமலை கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இடம் என்று கூறினால் அது மிகையல்ல. அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த எழில்  மிகும் நகரம் இந்த திருவண்ணாமலை. சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதில் இந்த ஊருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இங்கே சட்டப் பிரச்சனை இருப்பதாக கேள்விப்படுவதும் அரிது. பிரச்சனைகள் இன்றி வாழ வேண்டும் என்கிற நோக்கத்தோடு இருக்கும் பக்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்கின்றனர். ஆண்டுதோறும் இவ்விடத்திற்கு வருகை தரும் பக்தர்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள்.

இந்த நகரம் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. வாயு. காற்று, நீர் மற்றும் நிலம் ஆகிய பஞ்ச பூதங்களை சிதம்பரம், ஸ்ரீ காலஹஸ்தி, திருவாணைக்கோவில் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய ஊர்கள் பிரதிபலிக்கின்றன.இந்த நகரத்தில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோத்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. நவம்பர்/டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் பிரம்மோத்சவம் மிகவும் புகழ்வாய்ந்தது.தமிழ் நாள்காட்டியில் இவை கார்த்திகை மாதத்தை குறிக்கின்றது. இந்த விழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுவதோடு, கடைசி நாள் கார்த்திகை தீப திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது.இந்த கடை நாள் கொண்டாட்டத்தின் போது, பக்தர்கள் மூன்று டன் வெண்ணெய்யை உள்ளட்டக்கிய ஒரு பெரிய பாத்திரத்தில் விளக்கு கொழுத்துகிறார்கள். இந்த பாத்திரம் ஆணைமலை குன்றின் உச்சியில் வைக்கப்படுகின்றது.அருணாச்சலேஷ்வரா கோவில், ரமணா ஆசிரமம், விருபாக்‌ஷா குகை மற்றும் சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் ஆகியவை தென்னிந்திய இந்துக்கள் இடையே சமயச் சிறப்பு வாய்ந்த முக்கிய இடங்கள் ஆகும்.பாரம்பரியமும், திருவிழாக்களும்!ஒவ்வொரு பௌர்னமி நாளன்றும் சிவபெருமானை வழிபடுவதற்காக பக்தர்கள் வெறும் காலோடு ஆணைமலை குன்றை சுற்றி நடக்கிறார்கள். 14 கி.மீ. கூர்மையான கற்கள் நிறைந்த இந்த பாதையில் நடப்பதன் மூலம், சிவபெருமான் மீது உள்ள தங்கள் பக்தியை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.தமிழ் நாள்காட்டியின் படி வருடாந்தர சித்ராபௌர்னமியின் போது உலகெங்கும் இருந்து தங்கள் வேண்டுதல்களை செலுத்துவதற்காக, பக்தர்கள் இவ்விடத்தில் குவிகின்றனர்.இங்கு கொண்டாடப்படும் மற்றும் ஒரு புகழ்வாய்ந்த பண்டிகை கார்த்திகை மகா தீபம். வட ஆற்காட்டிலும் இந்த பண்டிகை அதிக பக்தியோடும், சிறப்போடும் கொண்டாடப்படுகின்றது.5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட திருவண்ணாமலையில், திருவிழா காலத்தில் 86 பக்தகோடிகளின் சங்கமத்தை காணலாம். 2900 அடி உயரத்தில் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதை காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது!மகாதீபம் ஏற்றப்பட்ட பிறகு பத்து நாட்களுக்கு விழா தொடர்ந்து நடைபெறுகின்றது. கார்த்திகை மகாதீபத்தின் போது திரளான பக்தகோடிகள் வருகை தந்தபோதிலும், இதுவரை இந்த பட்டணத்தில் எவ்வித சட்டம் ஒழுங்கு சீர்கேடும் நடைபெற்றது இல்லை.அமைதியும் சமாதானமும் நிறைந்த ஊர்!திருவண்ணாமலை ஒரு சிற்றூர். சமய உணர்வு உள்ளவர்கள் தவிற தமிழகத்திற்கு வெளியே இருக்கிறவர்கள் இதை குறித்து கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். பண்டிகைகளும், சடங்குகளும் அதிக பக்தியோடும், எவ்வித பிரச்சனைகளும் இல்லாமலும் மக்களால் கொண்டாடப்படுகின்றது.பெண்களுக்கும் குழந்தைகளுக்கும், சிறியோருக்கும், பெரியோருக்கும் இது பாதுகாப்பான நகரம் ஆகும். இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ள விபத்துகள் மற்றும் திருட்டுக்களின் எண்ணிக்கை, நாட்டின் குற்ற விகிதத்தோடு ஒப்பிடப்பட்டால் மிகவும் குறைவானது.மக்கள் இசைவோடு வாழ்ந்து, தங்கள் தொழில்களை இயன்றவரை அமைதியாக செய்கின்றனர். இந்த பட்டணத்தை பெங்களூரோடு இணைக்கின்ற முக்கிய சாலைகளிலேயே இந்த நகரத்தின் தொழில் மையங்கள் இருக்கின்றன.அணுகுதலும், வானிலையும்!இந்த நகரத்தின் மையப் பகுதியில் ரயில் நிலையம் இருக்கின்றது. இந்நகருக்கு நெருக்கமான விமான நிலையம் சென்னை சர்வதேச விமானநிலையம் ஆகும். ஆனால், சாலை வழியாக பயணம் செய்வதே இந்த பட்டணத்தை அடைய சிறந்த வழி.உஷ்ணமான கோடை வெயிலையும், மிதமான மழைப்பொழிவையும், மென்மையான குளிர்காலத்தையும் இந்நகரம் பெற்று இருக்கிறது.

     
If you like this, Share this with your Friend....... If you have any suggestions, Please Comment it... the comment will be included and will be published with your Name... 
   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here